என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் கொலை குற்றவாளி கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் கொலை குற்றவாளி கைது

    சென்னை விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    தஞ்சாவூர் அய்யப்பேட்டையை சேர்ந்த விஜயனிடம் (32) விசாரணை செய்த போது அவர் 2013-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி தஞ்சாவூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சென்னை வந்து கொண்டு இருக்கிறார்கள். #Tamilnews
    Next Story
    ×