என் மலர்
செய்திகள்

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். #Jallikattu
புதுக்கோட்டை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகளுடன் 100 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். #Jallikattu #tamilnews
Next Story






