என் மலர்
செய்திகள்

விடுமுறை முடிந்து திரும்பியதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுதபூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாள் விடுமுறை முடிந்து தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்:
ஆயுதபூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து கடந்த 29-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை வந்தது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்து தென் மாவட்டத்தை சேந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு அரசு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தொடர் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மற்றும் பஸ்களில் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்துக் கிடந்தன.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இருந்து சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்தன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

பஸ்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்து சென்றதால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூரை கடக்க சுமார் 2 மணி நேத்துக்கும் மேல் ஆனது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பெங்களத்தூரில் இறங்கிய பயணிகள் அங்கிருந்து மாநகர பஸ் மற்றும் மின்சார ரெயில்கள் மூலம் நகரின் பிற பகுதிகளுக்கு சென்றனர்.
பஸ்கள் மற்றும் கார்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேடுக்கு வந்து சேர்ந்தன.
காலை 10 மணிக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் ஓரளவு சீரானது. போக்குவரத்தை சரிசெய்ய பெருங்களத்தூரில் முன்னேற்பாடாக 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல போக்குவரத்து ஊழியர்களும் பணியில் ஈடுபட்டனர்.
பெருங்களத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே கார், ஆட்டோக்களை நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.

Next Story