என் மலர்

  செய்திகள்

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சாதாரண உடையில் வருமாறு மாணவர்களை மிரட்டுவதா?- ராமதாஸ்
  X

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சாதாரண உடையில் வருமாறு மாணவர்களை மிரட்டுவதா?- ராமதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சாதாரண உடையில் வருமாறு மாணவர்களை மிரட்டுவதா? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இன்று மாலை 4.00 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு கூட்டம் சேராததால், விழா அரங்கில் காலி இருக்கைகள் மட்டும் தான் காட்சியளித்தன. அதே போன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மாணவர்களையும், மாணவிகளையும் அழைத்துச் சென்று கூட்டத்தைக் காட்டி விடலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருந்தார்.

  ஆனால், மாணவர்களை அழைத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

  இதனால் சேலம் விழாவிற்கு கூட்டத்தைச் சேர்ப்பதற்காக தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் எல்லா சட்டவிரோத செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசிய அதிகாரிகள், விழாவிற்காக பொது மக்களை அழைத்து வருவதற்காக வாகனங்களை எரிபொருள் நிரப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர்.

  வாகனங்களை அனுப்ப மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்திருக்கின்றன.

  அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சேலம் விழாவுக்கு அரசு பள்ளிகளின் மாணவர்களை சாதாரண உடையில் அழைத்து வரும் படி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தப் படுவதாகவும் கூறப்படுகிறது.

  உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை சாதாரண உடையில் அழைத்துச் செல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விழாக்களுக்கு மாணவர்களை அதிக அளவில் அழைத்துச் செல்லும் போது ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் விரிவாக விளக்கியிருந்தனர். நீதிபதிகளின் அறிவுரைக்கு மாறாக, மாணவர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல துடிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டத்தில் இல்லாத செல்வாக்கை, இருப்பதைப் போன்று காட்டிக் கொள்வதற்காக இத்தகைய அத்து மீறல்கள் மற்றும் மிரட்டலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை அனுப்பும்படியும், மாணவர்களை சாதாரண உடையில் அனுப்பும்படியும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை நிர்பந்திப்பதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மாறாக, திருந்த மறுக்கும் மனிதர்களாக நடந்து கொண்டால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  Next Story
  ×