என் மலர்
செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே தங்கை வீட்டில் 75 பவுன் நகை-பணம் திருடிய அண்ணன்
சோழிங்கநல்லூர் அருகே தங்கை வீட்டில் 75 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூரை அடுத்த பனையூரில் வசித்து வருபவர் ராசூல்பேகம். இவரது வீட்டுக்கு பாண்டிச்சேரியில் வசிக்கும் அண்ணன் ஆதம் வந்து இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராசூல்பேகம் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் ஆதம் மட்டும் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து ராசூல்பேகம் வந்தபோது வீட்டில் ஆதம் இல்லை. பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 75 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை காணவில்லை.
நகை-பணத்தை கொள்ளையடித்து ஆதம் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம் முனுசாமி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. ரெயில் டிக்கெட் பரிசோதகர். கடந்த 18-ந்தேதி அவரது வீட்டில் 74 பவுன் நகை கொள்ளை போனது.
இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த டோரி பாபுவை கைது செய்தனர். அவனிடம் இருந்து 74 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story