என் மலர்

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி- ஸ்ரீபெரும்புதூரில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
    X

    கும்மிடிப்பூண்டி- ஸ்ரீபெரும்புதூரில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்மிடிப்பூண்டி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு முஸ்லீம் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு கடந்த 6 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதிக்கு மட்டும் முறையாக குடிநீர் வழங்குவது இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்க கோரி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 200 பேர் இன்று காலை கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களை பெண்கள் சிறை பிடித்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

    பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலைக்குள் குடிநீர் சப்ளை சீராக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் கும்மிடிப்பூண்டியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி கிராமங்களில் கடந்த 6 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை வெங்கல்- கொளத்தூர் செல்லும் சாலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×