என் மலர்
செய்திகள்

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.
திருப்பத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல்
திருப்பத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளக்காரம் பட்டி ரெயில் நிலையம் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் ரெயில் தண்டவாளப் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சேலம் நோக்கி செல்லும் ரெயில் பாதையில் லேசான விரிசல் இருந்ததை கண்டு பிடித்தனர்.
இது குறித்து அவர்கள் மொளக்காரம் பட்டி ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ஜோலார்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தண்டவாள பராமரிக்க பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரிசலை சரி செய்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக செல்ல வேண்டிய திருவனந்தபுரம் ரெயில் மொளக்காரப்பட்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டு 1½ மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
காலை 6.45 மணிக்கு அந்த வழியாக செல்ல வேண்டிய சரக்கு ரெயில், திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, அதிக வெப்ப நிலையில் இருந்து குளிர்ச்சி நிலைக்கு தண்டவாளம் வரும்போது இது போன்ற விரிசல் ஏற்படும். அதுதான் தற்போது நடந்துள்ளது.
தண்டவாள விரிசலை உடனடியாக கண்டு பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.

Next Story