என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய வாலிபர் அதில் படுத்திருப்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
    X
    உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறிய வாலிபர் அதில் படுத்திருப்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

    தாய்-மனைவி இடையே தகராறு: மின் கோபுரத்தில் ஏறி புதுமாப்பிள்ளை மிரட்டல்

    திருப்பத்தூர் அருகே திருமணமாகிய நாள் முதலே தாய்-மனைவி இடையே தகராறு தொடர்ந்து வருவதால் வெறுப்படைந்த புதுமாப்பிள்ளை மின் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள ப.முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ் என்கிற சுந்தரேசன் (வயது 24), லாரி டிரைவர். இவரது மனைவி ராதிகா (20). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. திருமணமாகிய நாள் முதலே ராதிகாவுக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தாஸ், திடீரென வீட்டின் அருகில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி படுத்துகொண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு கூட்டம் கூட தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் தாஸ் கீழே இறங்கினார். எனினும் இடையில் 8 அடி உயரத்தில் இருக்கும் போது திடீரென கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் பின்தொடர்ந்து ஓடியும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தாஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    Next Story
    ×