என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் பலி
    X

    எச்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் பலி

    எச்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த மானாம் பதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 20). இவர் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்றார்.

    எச்சூர் அருகே வந்த போது திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜஸ்டின் உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான மற்ற 2 பேரின் விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர்கள் அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×