என் மலர்

  செய்திகள்

  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை
  X

  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் பட்டப்பகலில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

  திருச்சி:

  திருச்சி தில்லை நகர் புதுமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 55). புதிய தமிழகம் கட்சி பிரமுகரான இவர் எடத்தெரு உப்புப்பாறையில் பந்தல்குமார் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.

  இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து உப்புப்பாறைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வரகனேரி முஸ்லிம் மேட்டுத்தெருவில் அவர் சென்ற போது திடீரென ஒரு ஆட்டோ வந்தது.

  ஆட்டோவில் இருந்து 4 பேர் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் அண்ணாத்துரை அதிர்ச்சியடைந்தார். அவரது சட்டையை பிடித்து இழுத்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் அவரை வெட்டினர்.

  இன்று காலை 9 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அண்ணாத்துரை அதே இடத்தில் பிணமானார். அண்ணாத்துரையை வெட்டி சாய்த்த 4 பேரும் அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் சாவகாசமாக மீண்டும் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

  சம்பவம் குறித்து அறிந்ததும் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உதவி கமி‌ஷனர் சீனிவாச பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கொலையுண்ட அண்ணாத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாத்துரையை வெட்டிக் கொலை செய்தது அவரது மகனை கொலை செய்த நபர்கள்தான் என தெரியவந்தது. கடந்த 2016-ம் ஆண்டு அண்ணா துரையின் ஒரே மகனான பிரபாகரன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது.

  இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஒரே ஒரு சாட்சியாக அண்ணாத்துரை உள்ளார். இந்த வாரம் அந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில் இன்று அண்ணா துரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

  அண்ணாத்துரையை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

  கொலையுண்ட அண்ணாதுரையின் உடலுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அய்யப்பன், சங்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

  Next Story
  ×