என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் தீபா பேரவையினர் போராட்டம்: டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயற்சி
சிதம்பரம், ஜூன்.12-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று போயஸ் கார்டனுக்கு திடீரென வந்தார். அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தான் தாக்கப்பட்டதாகவும், தீபா பேட்டியளித்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தீபா பேரவை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி. மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், திடீரென அவரது உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.






