என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொ.ம.தே.க. மாநாடு: மு.க.ஸ்டாலின் நாளை ஈரோடு வருகிறார்
    X

    கொ.ம.தே.க. மாநாடு: மு.க.ஸ்டாலின் நாளை ஈரோடு வருகிறார்

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நாளை மாலை தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு வருகை தருகிறார்.
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    மாநாட்டுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி பேசுகிகிறார். மாநில தலைவர் திருச்சி தேவராஜன், அவைத்தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன், பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மைய செயலாளர் கார்த்திகேய சேனாபதி ஆகியோர் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

    முன்னதாக மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினர் தூர் வாரிய ஈரோடு செம்மாம்பாளையம் குளத்தை பார்வையிடுகிறார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்துரையாடுகிறார்.
    Next Story
    ×