என் மலர்

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,096-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு பவுன் 22 ஆயிரத்து 152 ஆக இருந்தது. மறுநாள் (28-ந்தேதி) ரூ.72 குறைந்து பவுன் ரூ.22 ஆயிரத்து 224-க்கு விற்றது.

    அதை தொடர்ந்து ரூ.104 உயர்ந்தது. பவுன் ரூ.22 ஆயிரத்து 328 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.232 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 96 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.29 குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,762-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது.
    Next Story
    ×