என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்
  X

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். வேன் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி பன்னீர்செல்வி (வயது 30).

  இவர் பிரசவத்திற்காக சாத்தூர் அருகே படந்தாலில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

  பின்னர் அவர் குழந்தையுடன் வேனில், வத்திராயிருப்பு புதுப்பட்டிக்கு புறப்பட்டார். அதில் உறவினர்கள் உள்ளிட்ட 19 பேர் பயணம் செய்தனர்.

  நேற்று இரவு கிருஷ்ணன் கோவில்- வத்திராயிருப்பு ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த முருகேஸ்வரி, சுந்தரம்மாள், பெருமாளம்மாள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். பச்சிளம் குழந்தை அதிர்ஷ்ட வசமாக காயமின்றி தப்பியது.

  இந்த விபத்து தொடர்பாக சாத்தூரைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வராஜ் மீது, கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×