என் மலர்
கால்பந்து
- கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
- முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
- ஆட்ட நேர இறுதியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், செர்பியா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- ஆட்ட நேர இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 73-வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்தார்.
போர்ச்சுக்கல் அணியின் ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்தனர்.
கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.
- இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர்.
- இரண்டாவது பாதியில் முதல் கோலை பதிவு செய்ய கடும் போட்டி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எச் பிரிவில் உள்ள உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள் விளையாடின. துவக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர். இரு தரப்பினரும் கோல் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இரண்டாவது பாதியில் எப்படியாவது ஒரு கோலை பதிவு செய்துவிட்டால் வெற்றி பெற முடியும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். எனினும் ஆட்டநேர முடிவு வரை கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி பலிக்கவில்லை. எனவே, கோல் இன்றி ஆட்டம் டிரா ஆனது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- 48வது நிமிடத்தில் சுவிட்சலாந்து வீரர் ப்ரீல் எம்போலோ கோல் அடித்தார்.
- இரண்டாவது பாதியில் கேமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-ஜி அணியில் உள்ள கேமரூன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்போலோ கோல் அடித்தார். இதனால் சுவிட்சலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் கேமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கோல் வாய்ப்புகளை சுவிட்சலாந்து வீரர்கள் தடுத்தனர். அதேசமயம் சுவிட்சலாந்தும் கூடுதல் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 1-0 என சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.
- இன்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
- இதில் பெல்ஜியம் கனடாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிக்கி பட்ஷியாய் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- இன்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
- ஸ்பெயின் அதிரடி ஆட்டத்தால் 7-0 என அபார வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் டேனி ஆல்மோ ஒரு கோலும், 21வது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ ஒரு கோலும், 31வது நிமிடத்தில் பெரா டாரஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 3-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 54 வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரா டாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் காவியும், 90வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 92வதுநிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்தனர்.
கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 7-0 என அபார வெற்றி பெற்றது.
- முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் ஜெர்மனி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
- இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின. நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
- இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப் பிரிவில் உள்ள மொராக்கோ, குரோசிய அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து தவறவிட்டதால் கடைசிவரை கோல் அடிக்கப்படவில்லை. எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
- மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.
போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.
தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதுதொடர்பாக பேட்டியளித்த "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
- 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
- சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.
அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.
சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.
இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.
இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- ஆட்ட முடிவில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.
சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.






