என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
    X

    மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

    • பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
    • மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5ம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

    முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.

    இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகள் விளையாடாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×