என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வாஷிங்டன் சுந்தர் ஏன் 3 ஆம் இடத்தில் பேட்டிங் ஆட கூடாது? - தினேஷ் கார்த்திக் விளக்கம்
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆம் இடத்தில் களமிறங்கினார்.
- வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 3 ஆம் இடத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 29 ரன்களும் 2 ஆவது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்து நம்பிக்கை தந்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தினேஷ் கார்த்திக்கிடம் வாஷிங்டன் சுந்தர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "3 ஆம் இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது. அந்த இடத்தில் பியூர் பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவார்கள். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர், அவரிடம் பேட்டிங் டெக்னிக் இருந்தாலும், 3 ஆம் இடத்தில் இறங்கி விளையாடுவது சவாலானாதாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் 3 ஆம் இடத்தில் விளையாடவேண்டும் என்றால் அதற்கு அதிகமாக தயாராகவேண்டும். அவரால் பவுலிங், பேட்டிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாது.. அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.






