என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள்: ஹரிஸ் ராஃப்-ஐ கிழித்தெடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்..!
    X

    இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள்: ஹரிஸ் ராஃப்-ஐ கிழித்தெடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்..!

    • இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 3.4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
    • கடைசி ஓவர்களை அவரிடம் வழங்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் திலக் வர்மா (53 பந்தில் 69 ரன் நாட்அவுட்), சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (22 பந்தில் 33 ரன்) ஆகியோர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசிய நிலையில், ஹரிஸ் ராஃப் 3.4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹாரிஸ் ராஃப்-ஐ கடுமையான விமர்சித்துள்ளனர்.

    முகமது யூசுப் கூறுகையில் "எத்தனை போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இறுதி ஓவர்களை வீசக்கூடாது. கடந்த உலகக் கோப்பை ஞாபகம் இருக்கிறதா?. அவருடைய பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தால், சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும்" என்றார்.

    முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் "ஹரிஸ் ராஃப் பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. நாம் எல்லோருக்கும் மெல்போர்ன் போட்டி ஞாபகம் இருக்கிறது (விராட் கோலி ஹரிஸ் ராஃப் பந்தில் 2 சிக்ஸ் விளாசினார்). இது போன்ற சூழ்நிலையில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என கேப்டன் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தவறுகளை செய்கிறோம்" என்றார்.

    முகமது ஆமிர் "ஹரிஸ் ராஃப்-க்கு ஓவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தினர். ஆனால், சுழற்பந்து வீச்சாளரை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து, உத்வேகத்தை அப்படியே மாற்றிவிட்டனர். அவர் உங்களுடைய விக்கெட் டேக்கிங் பந்து வீச்சாளர் என்பதை சந்தேகம் இல்லை. அந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் தேவையிருந்தது. அப்படி செய்திருந்தால் போட்டியை இழந்திருக்க மாட்டீர்கள். பவர்பிளேயிலா் ஷாஹீன், பஹீம் சிறப்பாக ப்து வீசினார்கள்" என்றார்.

    பாகிஸ்தான் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தவுசீஃப் அகமது கூறுகையில் "கிரிக்கெட்டில் என்ன வேண்டுமென்றாலும் நடகலாம் என நாம் சொல்கிறோம். ஆனால், இது போன்ற விசயம் ஹார்ஸ் ராஃப்-க்கு மட்டும் கிரிக்கெட்டில் நடக்கிறது?. எங்களுக்கு வெளியே வேறு சில பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பிரான்சைஸ் கிரிக்கெட்டின் (T20 League) கதைகளை நிறுத்துங்கள். பிரான்சைஸின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ஹாரிஸ் ராஃப் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும். ஹசன் அலி அல்லது வேறு ஒரு இளம் வீரர் அல்ல. எங்கள் காலத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு முறையும் இல்லை" என்றார்.

    Next Story
    ×