என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 300 ரன்கள்..  வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா
    X

    டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் 300 ரன்கள்.. வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா

    • இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் திலக் வர்மா 72 ரன்கள் அடித்திருந்தார்.

    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இப்போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறவைத்த திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. திலக் வர்மா 72 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் டி20 வரலாற்றில் தொடர்ச்சியான போட்டிகளில் விக்கெட் இழக்காமல் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

    கடந்த 4 டி20 போட்டிகளில் திலக் வர்மா 107*, 120*, 19*, 72* ரன்களை அடித்து மொத்தமாக 318* ரன்கள் விளாசியுள்ளார். திலக் வர்மாவுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் மார்க் சாப்மன் - 271 ரன்களும் ஆரோன் ஃபின்ச் - 240 ரன்களும் , ஷ்ரேயாஸ் - 240 ரன்களும் அடித்துள்ளனர்.

    Next Story
    ×