என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா 448 ரன்கள் குவித்து டிக்ளேர் - 286 ரன்கள் முன்னிலை
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா 448 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' - 286 ரன்கள் முன்னிலை

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்தது.

    3 வீரர்கள் சதம் அடித்தனர். கே.எல். ராகுல் 100 ரன்னும், துருவ் ஜூரல் 125 ரன்னும் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 17 ரன் னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்றைய 3-வது நாளை இந்தியா தொடர்ந்து விளையாடும் என்றும் எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆடாமல் ஆட் டத்தை முடித்துக் கொள் வதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஸ்டன் சேசுக்கு 2 விக்கெட்டும், ஜெய்டன் ஷீல்ஸ், ஜோமல் வாரிகன், கேரி பியர் ஆகி யோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தன.

    286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் அடித்துள்ளது.

    Next Story
    ×