என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
    X

    டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

    • ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    133 எனும் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வெஸ்ட் இண்டஸ் அணியின் துவக்க வீரர் பிரான்டன் கிங் 22 ரன்களுக்கு (4 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), ஷிம்ரன் ஹெட்மையர் 32 பந்துகளில் 46 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர்.

    இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேபாளம் சார்பில் நந்தன் யாதவ் மட்டும் 1 விக்கெட் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் ெவற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    Next Story
    ×