என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் 2 மாற்றம்- வெளியான தகவல்
- டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.
- பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.
லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் இரு அணியும் களம் இறங்குகிறது.






