என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித்- ரித்திகா கொடுத்த அறிவுரை நான் அதை செய்ய உதவியது- சூர்யகுமார்
    X

    ரோகித்- ரித்திகா கொடுத்த அறிவுரை நான் அதை செய்ய உதவியது- சூர்யகுமார்

    • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார்.

    ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் களமிறங்கியது. இந்த தொடரில் இந்த அணி ஒரு தோல்வி கூட சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சூர்யகுமார் இந்த தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார். ஆனால் கேப்டன்ஷிப்பில் எந்தவித பதட்டமும் இன்றி சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

    இந்நிலையில் ரோகித் மற்றும் ரித்திகா கொடுத்த அறிவுரை தான் நம்பிக்கையான முடிவை எடுக்க உதவியது என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முக்கியமான தொடருக்கு முன்பு ரோகித் எப்படி வெளியில் இருந்து வரும் கருத்துகளை எப்படி தவிர்ப்பார் என்பது பற்றி ரோகித்திடமும் அவரது மனைவியிடமும் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

    ரித்திகா தொலைபேசியிலிருந்து தனது அனைத்து சமூக ஊடக செயலிகளையும் மூடிவிட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதைப் பின்பற்றினேன். அது எனக்கு முடிவெடுப்பதற்கு உதவியது.

    என சூர்யகுமார் கூறினார்.

    Next Story
    ×