என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டெஸ்ட் போட்டி: ரபாடாவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. மேலும் 2 தென் ஆப்பிரிக்கா வீரர்கள் காயம்?
    X

    2-வது டெஸ்ட் போட்டி: ரபாடாவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. மேலும் 2 தென் ஆப்பிரிக்கா வீரர்கள் காயம்?

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரபாடா விலகி உள்ளார்.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுதாத்தியில் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் காயம் காரணமாக ரபடா ஆடவில்லை. 2-வது டெஸ்டில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரபாடாவை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், மற்றும் யான்சன் ஆகிய இருவரும் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் தோள் பட்டை மற்றும் மூட்டுவலி காரணமாக பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    29 வயதான லுங்கி இங்கிடி, கடைசியாக ஜூன் 2025-ல் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடினார். அந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

    2018-ல் தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய இங்கிடி, இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது வருகை, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×