என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO | டி20 உலகக்கோப்பை வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய சஞ்சு சாம்சன்
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்.
- தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






