என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    10 போட்டியில் 3 சதம் அடிச்ச சாம்சன் எங்க?... 13 போட்டியா ஒரு அரை சதம் கூட அடிக்காத கில் எங்க?
    X

    10 போட்டியில் 3 சதம் அடிச்ச சாம்சன் எங்க?... 13 போட்டியா ஒரு அரை சதம் கூட அடிக்காத கில் எங்க?

    • சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
    • இதில் 3 முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க்கா அணி 12.3 ஓவரில் 74 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    முன்னதாக இந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).

    அதேபோல சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார்.

    இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.

    சதம் அடித்தும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடியும் ஒரு வீரரை அணியில் இருந்து நீக்குவது இந்திய அணியால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×