என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சான்ட்னெர் பந்தில் க்ளீன் போல்டு: விராட் கோலியும்... சுழற்பந்து வீச்சும்...
    X

    சான்ட்னெர் பந்தில் க்ளீன் போல்டு: விராட் கோலியும்... சுழற்பந்து வீச்சும்...

    • 2021-ல் இருந்து ஆசிய மண்ணில் சுழற்பந்து வீச்சில் 26 இன்னிங்சில் 21 முறை அவுட்.
    • இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் 10 முறை வீழ்ந்துள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் புனே நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்மிழந்தனர். இதனைத் தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். இவர் 9 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    விராட் கோலி சமீப காலமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறார். அதுவும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக முறை சிக்கியுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய கண்டத்தில் 26 இன்னிங்சில் 21 முறை சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். எடுத்த ரன்கள் 606 ஆகும். சராசரி 28.85 ஆகும். குறிப்பாக இடது கை ஆர்தேடெக்ஸ் ஸ்பின்னுக்கு எதிராக 27.10 சதவீதம்தான் சராசரி ஆகும்.

    Next Story
    ×