பர்ஹான் அதிரடி சதம்... நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறதுபாகிஸ்தான் தரப்பில் பர்ஹான் 100 ரன்கள் எடுத்தார்.
பர்ஹான் அதிரடி சதம்... நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on

டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக பர்ஹான் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் சல்மான் ஆகா - பர்ஹானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர்.

23 பந்தில் 38 ரன்கள் விளாசிய நிலையில் சல்மான் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவாஜா நஃபே 5 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய பர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com