VIDEO: மைதானத்தில் மோதிக்கொண்ட வாஷிங்டன் சுந்தர் - டேவிட் மில்லர்

இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் மைதான நடுவர் தலையிட்டு சமரசம் செய்தனர்.
VIDEO: மைதானத்தில் மோதிக்கொண்ட வாஷிங்டன் சுந்தர் - டேவிட் மில்லர்
Published on

அகமதாபாத:

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியின் போது இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

14-வது ஓவருக்குப் பிறகு நடந்த டிரிங்க்ஸ் பிரேக்கின் போது, இருவரும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் மைதான நடுவர் தலையிட்டு சமரசம் செய்தனர்.

பந்து வீசுகையில் ரன்-அப்பில் செல்லும் போது மில்லர் தொடர்ந்து அசைந்ததாக நடுவரிடம் வாஷிங்டன் சுந்தர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுவே இந்த வாக்குவாதத்திற்கான காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com