என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 தொடரில் அதிக சிக்சர்கள் - இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்த இந்தியா
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.






