என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதத்தை தவறவிட்ட கோலி... சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!
    X

    சதத்தை தவறவிட்ட கோலி... சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை!

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
    • அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    அதனைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்துவருகிறது. இந்நிலையில் 40வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் கோலி. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624வது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்தார்.

    ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்கள் குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


    Next Story
    ×