என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    #T20WorldCup2026 மோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைக்க வேண்டும்- கபில்தேவ்
    X

    #T20WorldCup2026 மோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைக்க வேண்டும்- கபில்தேவ்

    • அபிஷேக் சர்மா மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • அபிஷேக் சர்மாவும் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிகவும் மோசமாக ஆடி வருகிறார். அவர் 7 ஆட்டத்தில் 89 ரன்களே எடுத்துள்ளார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அபிஷேக் சர்மா மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவரை அணி நிர்வாகம் இறுதிப்போட் டிக்கு தேர்வு செய்ய வேண்டும். முந்தைய போட்டிகளின் செயல் திறனைப் பார்த்து முடிவு செய்யக்கூடாது.

    அபிஷேக் சர்மா மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைக்கவேண்டும். சிறப்பாக ஆட முடியும் என்றும், நிச்சயம் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவேன் என்றும், அபிஷேக் சர்மாவும் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    இங்கிலாந்துடனான அரை இறுதி ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டி கடைசி ஓவர் வரை கடினமாகச் செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை.

    ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். இந்தப் போட்டியின் போது பந்துவீச்சாளர்களுக்கு அதிக அளவில் அழுத்தம் இருந்தது. அவர் இறுதிக் கட்ட ஓவர்களில் மிகவும் அபாரமாக பந்துவீசினார். இதனால் தான் அவர் உலகின் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். சஞ்சு சாம்சன் திறமையான வீரர். கடந்த 2 போட்டிகளிலும் அவர் அபாரமாக விளையாடினார்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    Next Story
    ×