என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை- கோன்ஸ்டாஸ் சவாலுக்கு பும்ரா கூல் பதில்
    X

    புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை- கோன்ஸ்டாஸ் சவாலுக்கு பும்ரா கூல் பதில்

    • முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.
    • ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் நம்பர் ஒன் பவுலராக திகழும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரராக அவர் சாதனை படைத்தார். அத்துடன் பும்ராவுக்கு எதிராக ஒரே ஓவரில் (18) ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

    அதன தொடர்ந்து பும்ராவை இனிமேல் தொடர்ந்து தாம் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என்று அவர் கூறினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது போன்ற பல அனுபவங்களை நான் பார்த்துள்ளேன். சாம் கான்ஸ்டாஸ் ஒரு சுவாரஸ்யமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். எந்த சூழ்நிலையிலும் நான் ஆட்டத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன். ஒருநாளும் ஆட்டத்தில் இருந்து தள்ளி இருப்பதாக நினைக்கவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் சான் கோன்ஸ்டாஸை முதல் 2 ஓவர்களுக்குள் 6-7 முறை வீழ்த்தியிருப்பேன்.

    ஆனால் அன்றைய நாளில் அது நடக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டே அப்படிதான். சில நேரங்களில் சாதகமாகவும், சில நேரங்களில் பாதகமாகவும் அமையும். அதனால் சிறந்த வீரர்களை கூட விமர்சிக்க வேண்டிய சூழல் நிகழும். எந்த நேரத்தில் சவாலுக்காக தான் காத்திருக்கிறேன். ஒருநாளும் புதிய சவால்களை எதிர்கொள்ள அஞ்சியதில்லை.

    விக்கெட்டுகள் கிடைப்பது சில நேரங்களில் நம் கைகளில் இருக்காது. டி20 கிரிக்கெட்டை அதிகளவில் விளையாடி இருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 கிரிக்கெட்டை தான் விளையாடி வருகிறேன். அதனால் நாம் மிகச்சிறப்பாக பவுலிங் செய்யும் போது கூட நமக்கு விக்கெட் கிடைக்காது. ஆனால் சில சமயம், துல்லியத்தில் சிக்கல் உண்டாகும் போது கூட விக்கெட் கிடைக்கும்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் பும்ரா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×