என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும்- INDvsPAK போட்டி குறித்து கங்குலி கருத்து
- பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது.
- சில ஆண்டுகளாக இருதரப்பு மோதலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தது. மறுபுறம், புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்தது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிகெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தனது முடிவை மாற்றிய பாகிஸ்தான் அரசு, டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியில் விளையாட தங்கள் கிரிக்கெட் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்த உலகக் கோப்பையில் இது (INDvPAK) மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது. ஏனெனில் இந்தியா வலுவாக உள்ளது. சில ஆண்டுகளாக இருதரப்பு மோதலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.






