என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம் பிடித்த இஷான் கிஷன்
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- இந்த தொடரில் இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார்.
மும்பை:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.
நடந்து முடிந்த SMAT தொடரில் கேப்டனாக மற்றும் பேட்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






