என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்
    X

    IPL 2025: 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை தட்டிக்கொடுத்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்

    • சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்
    • ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.

    மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் இழந்ததை அடுத்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவை சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    Next Story
    ×