என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: RCB Vs MI போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
    X

    IPL 2025: RCB Vs MI போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

    • மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின
    • இப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×