என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகலா?
- ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ளது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் திருப்திகரமாக அமையவில்லை. ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்சின் (ஆஸ்திரேலியா) மனைவி ரெபேக்கா விமான நிலையத்தில் மூட்டை முடிச்சுகளுடன் கம்மின்சும் இருக்கும் இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'இந்தியாவில் இருந்து விடைபெறுகிறேன். இந்த அழகான நாட்டுக்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கம்மின்ஸ் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து ஐதராபாத் நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.






