என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள்: ஷிகர் தவானை முந்தினார் ரோகித் சர்மா
    X

    ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள்: ஷிகர் தவானை முந்தினார் ரோகித் சர்மா

    • சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

    மும்பை:

    மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

    இதற்கிடையே, ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 260 போட்டிகளில் 8,326 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் 8 சதங்கள், 59 அரை சதங்கள் அடங்கும்.

    இந்நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 76 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா 258 போட்டிகளில் 6,786 ரன்களுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இதில் 2 சதங்கள், 44 அரை சதங்களும் அடங்கும்.

    இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 222 போட்டிகளில் 6,769 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதில் 2 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும்.

    Next Story
    ×