என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே... IPL கோப்பையை வென்றது குறித்து உருக்கமாக பதிவிட்ட கோலி
    X

    18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே... IPL கோப்பையை வென்றது குறித்து உருக்கமாக பதிவிட்ட கோலி

    • பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
    • இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற புகைப்படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாம்பியன் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கோப்பையை பிடித்தபடி விராட் கோலி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த இன்ஸ்டா பதிவில் "ஐபிஎல் கோப்பையே! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×