என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கிளாசன் 37 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடினார்.
அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 59 ரன்னாக இருக்கும்போது அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேறினார்.
டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11.1 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ரெட்டி 19 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் சேர்த்தனர். கடைசி ஓவரில் அனிகெட் சர்மா 2 சிக்சரும், கம்மின்ஸ் ஒரு சிக்சரும் அடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அனிகெட் சர்மா 8 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், கம்மின்ஸ் 4 பந்தில் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.






