என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
- சன்ரைசர்ஸ் ஐதராபாத்து அணிக்கு இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில் ஓ'ரூர்கி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, எசான் மலிங்கா.






