என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அதே இலக்கு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது போல நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா? 2004-ன் வீடியோ வைரல்
- 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 93 ரன்னில் இந்திய அணி ஆல் அவுட் ஆக்கியது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்னில் சுருண்டது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் 5-வது நாள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட்டில் குறைவான இலக்கை நிர்ணயித்து 2004-ம் ஆண்டு வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த இந்திய அணி, 13 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதேபோல இறுதிநாளான இன்று நியூசிலாந்து அணி வெல்ல 107 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






