என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3 போட்டிகளிலும் கான்வேயை வீழ்த்திய ஹர்ஷித் ராணா
    X

    3 போட்டிகளிலும் கான்வேயை வீழ்த்திய ஹர்ஷித் ராணா

    • முதல் இரண்டு போட்டிகளிலும் க்ளீன் போல்டானார்.
    • இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் கான்வேயை ஹர்ஷித் ராணா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    முதல் போட்டியில் 56 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் க்ளீன் போல்டானார். 2-வது போட்டியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    Next Story
    ×