என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை கைப்பற்றுமா?: இன்று கடைசி டி20 போட்டி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை கைப்பற்றுமா?: இன்று கடைசி டி20 போட்டி

    • கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

    பிரிஸ்பேன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×