என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: 5 ரன்னில் உலக சாதனையை மிஸ் செய்த இந்திய அணி
    X

    டி20 உலகக் கோப்பை: 5 ரன்னில் உலக சாதனையை மிஸ் செய்த இந்திய அணி

    • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் குவித்தது.
    • 254 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது இடத்தில் உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அபிஷேக் 55, ஹர்திக் பாண்ட்யா 50, திலக் 44, இஷான் கிஷன் 38, சூர்யகுமார் 33, சஞ்சு சாம்சன் 24 ரன்கள் குவித்தனர். மொத்தமாக இந்திய அணி 17 சிக்சர்களை விளாசியுள்ளனர்.

    256 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணியாக முதல் இடத்தில் இலங்கை அணி உள்ளது. கென்யா அணிக்கு எதிராக 260 ரன்களை இலங்கை அணி குவித்துள்ளது.

    அதற்கு அடுத்தப்படியாக இன்று 256 ரன்கள் எடுத்த இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது. 254 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×