என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2027 உலக கோப்பையில் விராட் இருந்தால்.. மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
- விராட் கோலி, 2027 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளார்.
- தேர்வாளர்கள் எந்த அடிப்படையில் அவரது (2027 உலக கோப்பை) உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று 2 பிரிவுகளாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது. ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான விராட், ரோகித் இடம் பெற்றுள்ளனர். ரோகித் கேப்டனாக இல்லாமல் வீரராக மட்டுமே விளையாட உள்ளார்.
மேலும் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த தொடரே இவர்கள் இருவருக்கும் கடைசி ஒருநாள் தொடராக இருக்கலாம் என பல்வேறு கருத்துக்கள் வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு அணியின் பயிற்சியாளரும் தேர்வு குழு தலைவரும் மறைமுகமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாட ஆர்வமாக இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி, 2027 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளார். லண்டனில் தனது சமீபத்திய இடைவெளியின் போது, கோலி தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டார். நான் அங்கு இருந்ததால் அவர் ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 அமர்வு வரை பயிற்சி செய்து கொண்டிருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். அதாவது, அவர் உலகக் கோப்பையை விளையாடுவதில் தீவிரமாக இருக்கிறார்.
தேர்வாளர்கள் எந்த அடிப்படையில் அவரது (2027 உலக கோப்பை) உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கம்பீர் எப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சுற்றுப்பயணம் ஏன் முக்கியமானது? தொடர்ச்சியாக 2 சிறந்த ஒருநாள் போட்டிகளை வழங்கிய பிறகு அவர் நிரூபிக்க ஏதாவது விட்டுவிட்டாரா?
அவர் அருகில் இருந்தால், எனக்கு எந்த பதற்றமும் இருக்காது. ஏனென்றால் அழுத்தத்தின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அதை மீண்டும் மீண்டும் செய்துள்ளார். அவர் அதை மீண்டும் செய்வார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
என தினேஷ் கார்த்திக் கூறினார்.






