என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்திய அணிக்கு திரும்பும் ஹர்திக் பாண்ட்யா- வெளியான தகவல்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
- அக்டோபர் 14-ந் தேதியில் இருந்து பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் பாண்ட்யா மறுவாழ்வு பெற்று வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
இதனையடுத்து இந்தியா- தென் ஆப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் காயம் காரணமாக இடம் பெறாத அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் அக்டோபர் 14 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வருகிறார். பெங்களூருவில் உள்ள CoE-யில் நான்கு வாரங்கள் தங்கி இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடருக்காக உடற்தகுதியை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






