என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவி பறிப்பு குறித்து ரோகித்திடம் விளக்கிய காம்பீர்?
    X

    ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவி பறிப்பு குறித்து ரோகித்திடம் விளக்கிய காம்பீர்?

    • பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்.
    • அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெர்த்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

    டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.

    இதையடுத்து அணியில் ஒரு வீரராக ரோகித்சர்மா களம் இறங்குகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? சுப்மன் கில் எதற்காக கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் காம்பீர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, கோலியின் பங்களிப்பு இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இதனால் எந்த ஒரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடும்படியும் ரோகித் சர்மாவிடம் காம்பீர் தெரிவித்துள்ளார். புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் மற்றும் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்று களத்தில் வழிநடத்த வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

    Next Story
    ×