search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பேட்டிங் பவுலிங்கில் மிரட்டும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்களின் முழு விவரம்
    X

    பேட்டிங் பவுலிங்கில் மிரட்டும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்களின் முழு விவரம்

    • ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது.
    • லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    அதே சமயம் கடந்த சீசனில் லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. கே.எல்.ராகுலை பெங்களூரு அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆகவே டெல்லி அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹாரி புரூக் என அதிரடி காட்ட பலர் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அது சமயம் மிடில் ஆர்டரில் விளையாட டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அசுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    அக்சர் படேல், குல்தீப் யாதவ் என சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், மோகித் சர்மா என்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் டெல்லி அணியில் உள்ளனர்.

    ஆகவே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணி வரும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    23 பேர் கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி:

    1. அக்சர் படேல், 2. குல்தீப் யாதவ், 3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 4. அபிஷேக் போரல், 5. மிட்செல் ஸ்டார்க், 6. கேஎல் ராகுல், 7. ஹாரி புரூக், 8. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், 9. டி.நடராஜன், 10. கருண் நாயர், 11. சமீர் ரிஸ்வி, 12. அசுதோஷ் சர்மா, 13. மோகித் சர்மா, 14. ஃபாஃப் டு பிளெசிஸ், 15. முகேஷ் குமார், 16. தர்ஷன் நல்கண்டே, 17. விப்ராஜ் நிகம், 18. துஷ்மந்த சமீரா, 19. டோனோவன் ஃபெரீரா, 20. அஜய் மண்டல், 21. மன்வந்த் குமார், 22. திரிபுரானா விஜய், 23. மாதவ் திவாரி.

    Next Story
    ×